கொழும்பு ஸ்ருடியோ மீடியா ஆகிய நாம் இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இயங்கும் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு குறு நாடகம்,
தொடர் நாடகம் மற்றும் குறுந்திரைப் படங்களை தாயாரித்து வழங்குவதுடன், கிரபிக்ஸ் மற்றும் விளம்பரங்களையும் தயாரித்து வருகின்றோம்.
கொழும்பு ஸ்ருடியோ ஸ்தாபனம் 1965ம் ஆண்டு யாழ்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது, இதன் அமைப்பாளர் திரு அமரர் அ.குகதாசன். இவர் இந்தியாவில்
முறைப்படி புகைப்பட, நிழல் பட மற்றும் புளொக் தயாரிப்புக்களை பயின்று பின்னர் யாழ்மண்ணில் கொழும்பு ஸ்ருடியோவை நிறுவினார்
புளொக் தயாரிப்பிலும் புகைப்பட தயாரிப்பிலும் சிங்கள ஆதிக்கம் கையோங்கி நின்ற காலகட்டத்திலும் கொழும்புக்கு அனுப்பியே புளொக் மற்றும்
புகைப்படங்களை தயாரிக்க வேண்டிய காலகட்டத்தில் யாழ் மண்ணில் முதன் முதலாக இத் தயாரிப்புக்களை சுயமாக தாயாரித்து எமது தேவைகளை
நாமே நிறைவு செய்ய முடியும் என்று உணர்த்திய தமிழன். அன்னார் திரு. A.குகதாசன் அவர்கள், 1998ம் ஆண்டு கொழும்பில் அகாலமரணமானார்.
அவர் நினைவில் எங்கள் பணி தொடர்கிறது
இலவசமாக சுனாமி CDஐ பெற்றுக்கொள்ள
contact us: [0044] 07950 301 300
மறுபக்கம் என்பது எமது தற்போதைய திகில் தொடர் நாடகத் தயாரிப்பாகும். இத் திகில் தொடர் நாடகத்தில் நடிக்க விரும்பும் நடிகர்கள், நடிகைகள் உடன் எம்மை தொடர்பு கொள்ளவும்